17 ஜூலை, 2010

இலங்கைப் பணிப் பெண் குவைத் தூதரகத்தில் தஞ்சம் 13 வருடங்கள் பூட்டி வைத்து வதை

குவைத்தில் சுமார் 13 வருடங்களாக எவ்வித கொடுப்பனவும் இன்றி வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவர் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அவிசாவளையைச் சேர்ந்த 57 வயதான கமலாவதி கெடவல என்ற பெண்ணே இவ் வாறு தஞ்சமடைந்து ள்ளார்.

பணிப்பெண்ணாக குவைத் சென்ற இவர் குறிப்பிட்ட வீட்டில் வேலைக்க மர்த்தப்பட்டுள்ளார். வேலைக்கமர்த்தப்பட்ட நாள் முதல் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கடுமையாக உழைக்கவும் வற்புறுத்தப்பட் டுள்ளார். குறிப்பிட்ட வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது அவரை இழுத்து வந்து தண்டித்துள்ளதுடன் வெளியேறவிடாது எந்நேரமும் கண்காணித்து வந்துள்ளனர்.

இதே வீட்டுக்கு இந்தோனேஷிய நாட்டு பிரஜையொருவரும் அண்மையில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார். அவரது உதவியுடனேயே இலங்கைப் பெண்மணி தப்பி வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எல். கே. ருஹுணகே தெரிவித்தார்.

13 வருட கொடுப்ப னவு மற்றும் நஷ்டஈடு என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கென குறிப்பிட்ட பெண் நேற்று இலங்கை தூதரக அதிகாரிகளின் ஊடாக குவைத் உள்துறை அமைச்சுக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

குறிப்பிட்ட வீட்டையும் அடையாளம் கண்டுள்ளதாக பணியகத்தின் முகாமையாளர் எல். கே. ருஹுணகே தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக