17 ஜூலை, 2010

இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வியில்

ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர்கள் இஸ்லாமாபாத்தில் வியாழன்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கவில்லை என பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மறுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது அவர் தொடர்ச்சியாக இந்திய அரசிடமிருந்து தொலைபேசி அறிவுறுத்தல்களைப் பெற்று சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டையும் எஸ்.எம்.கிருஷ்ணா நிராகரித்துள்ளார்.

இந்திய தூதுக்குழுவினரின் செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மெஹ்முத் குரேஷி ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையாக சாடியிருந்தார்.

இரண்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தை, இருதரப்பு நாடுகளுக்கு இடையிலும் உள்ள முரண்பாடான விடயங்கள் தொடர்பில் எவ்வித வெளிப்படையான முன்னேற்றமும் எட்டப்படாது முடிவடைந்துள்ளது.

2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் முதற்தடவையாக நடைபெற்றுள்ள இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, கடந்த ஆறுமாத காலத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது உயர்மட்ட சந்திப்பாக அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக