26 மே, 2010

விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil  movie news, Tamil news paper online, political news, business news,  financial news, sports news, today news, India news, world news, daily  news update

திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்துள்ளனர். இதனால், அவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பயணிகளில் 128 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்ற 30 பேர் அடையாள காண முடியாத அளவுக்கு கருகி விட்டனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடக்கிறது.
இது தொடர்பாக கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் பலியான 8 பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.
வளைகுடா நாட்டில் மோசடி கும்பல்கள்:
வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட்களை, தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். நாடு திரும்பும்போது மட்டுமே அதை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் பாஸ்போர்ட்களை திருப்ணிபிக் கொடுப்பதில்லை. இது போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் சில மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் பெற முடியாதவர்கள், எப்படியாவது நாடு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டை பெற்று பயணம் செய்கின்றனர். இப்படிதான், விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக