31 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரிடம் மனு






அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அடுத்ததாக மதுரையில் பேச திட்ட மிட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயா டி.வி. இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து கே.அறிவொளி பெயரில் இந்த கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மதுரை பொதுக்கூட்டத்தை ரத்த செய். இல்லையென்றால் குண்டு வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயா டி.வி. சார்பில் டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று மனு கொடுத்தனர்.

மனு குறித்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.

மதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக