31 ஆகஸ்ட், 2010

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்



சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டு ள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்கியிருக்கும் தமது விடுதிகளை விட்டு அதிகளவில் வெளியேறுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதே போன்ற உத்தியிலோயே சன் சீ பக்கலும் கனடாவை சென்றுள்ளதாக தாய்லாந்து காவல் துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவர்கள், பாக்கொக்கில் இருந்து தெற்கே உள்ள மீன்பிடி பிரதேசமான சொங்கால சென்று அங்கிருந்தே கனடா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடா சென்றடைந்துள்ள சன் சீ கப்பல் அகதிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் பயணித்த ஒவ்வொரு பயணியிடமிருந்தும் சராசரியாக 50 ஆயிரம் டொலர்கள் அற விட்டிருப்பதாக கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு கோடி டொலர்களுக்கு மேல் இந்த பயணிகள் செலுத்தியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக