ஹைதராபாத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தின் தூண் ஒன்று ஞாயிறன்று 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதன் 4 தூண்களும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. இதற்கு சார்-4, மினார்-தூண் எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தக் கட்டிடம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எனவே தான் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹைதராபாத்தில் குவிகிறார்கள்.
இந்நிலையில் ஞாயிறன்று இரவில், தூணின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் கீழே இடிந்து விழுந்தது. இதைப் பார்த்ததும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.
கட்டிடம் இடிந்தபோது எவரும் அருகில் இருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கடந்த 2 மாதமாக ஹைதராபாத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் சார்மினார் கட்டிடத்தில் ஆல மரம், அரசமரம் போன் றவை ஆங்காங்கே வளர்ந்துள்ளன.
இதனால்தான் தூணின் ஒரு பகுதி இடிந்திருக்கும் என்று சார்மினார் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அயூப் என்பவர் கூறுகையில்,
"400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சார்மினார் கட்டிடத்தை அரசு முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால் அக்கட்டிடம் எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது" என்றார்.
நேற்றும் இன்றும் சார்மினார் கட்டிடத்தில் ஏற பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாக ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக