31 ஆகஸ்ட், 2010

அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் ஐ.தே.க மேலும் பலவீனமடையும்: அப்துல்காதர்

புதிய அரசியல் அமைப்பு மாற்ற யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு தெரிவிக்காவிட்டால் ஐ.தே.க. எதிர்காலத்தில் மேலும் பலவீனம் அடைந்து விடும் என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் கம்பளையில் வைத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஐ.தே.க. அங்கத்தினர் பலர் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு சந்தர்ப்பம் வழங்காது விட்டால் இன்னும் பல அங்கத்தவர்கள் கட்சியை விட்டும் நீங்குவர். இதனால் கட்சி சின்னாபின்னமாகி விடும். பல பாராளுமன்ற அங்கத்தவர்களை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்று கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க யாரை நம்பி ஐ.தே.க. ஆதரவாளர்களை கைவிட்டாரோ அவர்கள் இப்போது ரனில் சிக்கிரமசிங்கவை கைவிட்டு விட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பளையிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு வந்தார். இது நாட்டின் இராஜா ஒரு குடிசைக்கு வந்த மாதரியாகும். இது சாதாரண விடய மல்ல. இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் ஜனாதிபதி கௌரவித்ததாகவே நான் கருதுகிறேன் என்றார்;.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக