31 ஆகஸ்ட், 2010

இலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தம்





இலங்கை அதிபராக ராஜபட்ச 3-வது முறையாகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசியல் சாசன சட்டப்படி, அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். இப்போது அதிபராகவுள்ள ராஜபட்ச 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனிடையே அவரே முன்றாவது முறையாகவும் பதவியில் தொடர வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அவர் 2016-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடியும்.

ஆனால் இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதற்காக சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை ராஜபட்ச நாடுவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக