இலங்கைப்
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக