புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள் குவிக்கப் பட்டிருப்பதாகவும், இந்திய, பாக்., சர்வதேச எல்லையில் சீன படையினர் நோட்டமிட்டதாகவும் வந்த செய்தியை அடுத்து இது குறித்து கவனமாக ஆய்வு செய்து , உண்மை இருக்கிறதா என உரிய முறையில் கண்காணிக்கும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 26 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ரோடு மற்றும் ரயில் பாதை அமைப்பது தொடர்பான பணியில் ஏழாயிரம் முதல் 11 ஆயிரம் சீன படை வீரர்கள் அங்கு குவிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சீன தனது போக்குவரத்து பலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாக்., கில் சீனபடைகள் கடல்படை தளம் அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் கல்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும் .
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்தவொரு பணியும் செய்ய சீனா உதவி செய்யக்கூடாது என்றும் இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீன இவ்வாறு களம் இறங்கியிருக்கிறது.
இந்த விஷயம் குறித்து வெளியுறவு துறை அமைச்சக செயலர் விஷ்ணுபிரசாத் கூறுகையில் இதில் உண்மை இருக்கிறதா என ஆய்ந்து வருகிறோம். இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
சீன படைகள் நடமாட்டம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான யஸ்வநத்சின்கா கூறுகையில், சீன படைகள் இந்த அளவிற்கு அத்துமீறி நடந்திருப்பதன் மூலம் ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் பலவீனம வெளிச்சத்திற்கு வந்துள்ளது என குறை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக