26 பிப்ரவரி, 2011

நீதி அமைச்சர் ஹக்கீம், பிரதம நீதியரசர், பொலிஸ் மா அதிபர் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்கு நீதிமன்ற செயற்பாடுகள் பற்றி ஆராய்வு



வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வுள்ளன. வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

நீதிமன்ற பணிகளை மேலும் செயற்திறன்மிக்கதாக மேற்கொள்ளுவது மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என்பன குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த சந்திப்பு உச்சநீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக நீதிமன்றங்கள் ஆரம்பிப்பதற்குத் தேவையான கட்டடங்களை பெறுவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கில் வாகரை, கலுவாஞ்சிக்குடி, கிண்ணியா மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களை துரிதமாக மீள ஆரம்பித்தல், ஈச்சிளம்பற்று, கிளிவெட்டி ஆகிய இடங்களில் நீதிமன்றங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்தல், கிழக்கில் நீதிபதிகளுக்கு விடுதி வசதி அளித்தல் என்பன குறித்தும் இங்கு முக்கியமாக ஆராயப் பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நீதி மன்றங்களில் குற்றவியல் வழக்கு களை விசாரிப்பதற்கு ஏதுவாக பொலிஸ் அத்தியட்சகர்களை நீதிபதி களாக நியமிப்பது பற்றியும் விரி வாக ஆராயப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் நீதிமன்றங்கள் ஆரம்பி ப்பது குறித்து குறித்த பிரதேச பொலிஸ் நிலையங்களை அறிவூட்டவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒலுவி லில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்குப் பதிலாக நிரந்தர பொலிஸ் நிலையமொன்றை அமைப் பது குறித்தும் இங்கு கவனம் செலு த்தப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்க ளில் தமிழ் மொழியில் பணியாற்ற க்கூடிய பொலிஸாரை ஈடுபடுத்துவ தற்கான வழிவகைகள் பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய சுமார் 2 ஆயிரம் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் இங்கு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் பொலிஸார் மேலும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியமனம் வழங்கப்பட்டு ள்ள பொலிஸாருக்கு (6) இடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக