26 பிப்ரவரி, 2011

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தாது ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 19 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போதே இந்த இரு மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலை 17 ஆம் திகதி நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு எனும் சொல் பயன்படுத்தப்பட்டமையினாலேயே 19 சபைகளுக்கான வேட்புமனுக்களும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் அக்குரஸ்ஸை, அக்மீமனை, மொனறாகலை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக