15 மார்ச், 2011

ஓமந்தை வரை யாழ். தேவி


எதிர்வரும் 26ம் திகதி ஓமந்தை ரயில் நிலையம் வைபவ ரீதியாக திறக்கப்படும்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவைகள் 26ம் திகதி முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து இதுவரைகாலமும் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிற்கு புறப்பட்ட யாழ். தேவி ரயில் சேவை ஒரு மணித்தியாலம் முன்னதாக 2.30 மணிக்கு புறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓமந்தை நிலையம் திறக்கப்பட்ட தும் கொழும்பிற்கான அனைத்து ரயில் வண்டிகளும் அங்கிருந்து புறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக