15 மார்ச், 2011

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாடசாலைகள் மூடப்படும் கல்வி அமைச்சு அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடை பெறும் பிரதேசங்களில் உள்ள அர சாங்க பாடசாலைகள் நாளை 16ஆம் திகதியும் நாளை மறு நாளான 17ஆம் திகதியும் மூடப் பட்டிருக்கும் என்று கல்வி அமை ச்சின் செயலாளர் எச். எம். குண சேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம், கிளி நொச்சி உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறாத இடங் களில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

வாக்குகளை எண்ணும் நிலையங் களாக பயன்படுத்தப்படும் பாட சாலைகள் நேற்று 14ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூடப்பட்டி ருக்கும் தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் வரு மாறு:

1) இசிபதன கல்லூரி - கொழும்பு

2) சியனெ மகா வித்தியாலயம் – பத்தலகெதர, கம்பஹா

3) பஸிதுன்ரட கல்வியியற் கல்லூரி - களுத்துறை

4) கிறிஸ்து தேவ தேசிய பாடசாலை – மாத்தளை

5) காமினி தேசிய பாடசாலை – நுவரெலியா

6) சுசீ தேசிய பாடசாலை - அம்பாந்தோட்டை

7) மலியதேவ ஆண்கள் பாடசாலை – குருணாகல்

8) மலியதேவ பெண்கள் பாடசாலை – குருணாகல்

9) சென். அன்ட்ரூஸ் மகா வித்தியாலயம் – புத்தளம்

10) மத்திய மகா வித்தியாலயம் - அனுராதபுரம்

11) புவஸ்திபுர தேசிய கல்வியியற் கல்லூரி - பொலன்னறுவை

12) மகானாம மத்திய மகா வித்தியாலயம் - மொனராகல

13) விசாக உயர்தர மகளிர் பாடசாலை – பதுளை

14) பதுளை மத்திய மகா வித்தியாலயம் – பதுளை

வாக்குகளை எண்ணும் நிலையங்களாக

பயன்படுத்தப்படும் பாடசாலைகள்

1) வித்யாலோக வித்தியாலயம் – பத்தலகெதர, கம்பஹா

2) மியூஸியஸ் வித்தியாலயம் - களுத்துறை

3) சென். சில்வெஸ்டர் - கண்டி

4) சென். அலோசியஸ் - காலி

5) ரோஹன மகா வித்தியாலயம் – மாத்தறை

6) ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம் – குருணாகல்

7) பாத்திமா மகளிர் வித்தியாலயம் – புத்தளம்

8) செய்னப் மகளிர் வித்தியாலயம் – புத்தளம்.

9) விசாகா கனிஷ்ட வித்தியாலயம் – பதுளை.

10) சுமன மகளிர் - இரத்தினபுரி

11) சுவர்ண ஜயந்தி - கேகாலை

12) கேகாலை மகளிர் மகா வித்தியாலயம் - கேகாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக