15 மார்ச், 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹெல உறுமய

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு தெளிவில்லாமலேயே உள்ளது. எனவே நிபுணர் குழுவின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிடிகீந்த ஸ்ரீ வர்ணசிங்க

இலங்கைக்கு எதிராக நியமிக்கப்ட்ட பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இறுதிக் கால யுத்தின் போது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் செய்ய உள்நாட்டில் நீதிமன்றங்களும் சட்டங்களும் இருக்கும் போது சர்வதேச விசாரணையொன்று நடைபெறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக