15 மார்ச், 2011

இந்திய ரயில் பெட்டிகள் இறக்குமதிக்குத் தடைஇந்தியாவில் இருந்து கொழும்பு- மாத்தறை அதிவேக புகையிரத சேவைக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள 20 புகையிரத பெட்டிகளில் 17 பெட்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட மூன்று புகையிரதப் பெட்டிகள் எதிர்பார்த்த அளவு தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் இதனால் இறக்குமதி செய்யப்படவிருந்த பெட்டிகளை இடைநிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு புகையிரத பெட்டியின் பெறுமதி இலங்கை நாணயப்படி ரூபா 38கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக