15 மார்ச், 2011

நீதி, நியாயமான தேர்தலுக்கு இடையூறுகள் ஏற்பட்டால் வாக்குகள் செல்லுபடியாகாது






உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கலவரம் ஏற்படுத்தி சுதந்திரமும் நியாயமானதுமான தேர்தலை நடத்த இடமளிக்கப்படாத அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்றதாக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள் ளார்.

இவ்வாறு வாக்களிப்பு நிலையமொன்றில் அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்ற தாக்கப்பட்டால் அதனுடன் சம்பந்தப் பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் இறுதி முடிவுகள் வெளியிடப்படமாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.

அவ்வாறான ஒரு வாக்காளிப்பு நிலையத்தில் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட்டு அதன் பின்னரே குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேர்தல் அதிகாரிகளை விரட்டியடித்தல், காலை 7 மணிக்கு வாக்களிப்பை ஆரம்பிக்க முடியாமற் செய்தல், மாலை 4 மணிக்கு வாக்களிப்பை முடிவுக்கு கொண்டு வரமுடியாமற் செய்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் ஆகியவை நியாயமான தேர்தலை நடத்த இடமளிக்கப்படாத நடவடிக்கைகளாக கணிக்கப்படும்.

பலவந்தமாக போடப்படும் வாக்குகளை நீக்கிவிட்டு வாக்குகளை எண்ண நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடி யாமற் போகுமிடத்து அப் பிரதேசத் துக்கான வாக்குகள் செல்லுபடியற்ற தாக்கப்படும் என்றும் தேர்தல் ஆதீணாயளர் குறிப்பிட்டார்.

அதேபோன்று குழப்ப நிலை உள்ள பிரதேசங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தாமதமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக