15 மார்ச், 2011

அரசியல் இலாபத்துக்காக மாணவர்களை ஐ.தே.க பலிக்கடாவாக்குகிறது அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி


வெளிப்படையாக பேச முடியாத எதிர்க்கட்சியினர் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு குழப்பம் விளைவிக்கிறது

அரசியல் தேவைகளுக்காக எதிர்க்கட்சியினர் மாணவர் சமுதாயத்தைக் காட்டிக்கொடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியல் லாபத்திற்காக மாணவர்களை காட்டிக்கொடுப்பதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அம்பாந்தோட்டை மாவட்ட த்தில் உள்ள ஐ.ம.சு. முன்னணி ஆதரவாளர்களை ஜனாதிபதி நேற்று சந்தித்தார். நேற்று காலை லுணுகம்வெகர, தியவர கிராம ஐ.ம.சு.மு. செயற்பாட்டாளர்களை சந்தித்த அவர், அடுத்து தங்கல்ல, தெபரவெவ, பன்னகமுவ மற்றும் திஸ்ஸமகாராம பிரதேச ஆதரவா ளர்களை சந்தித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரி வித்த ஜனாதிபதி பாடசாலை நேரத்தை நீடிக்கப்போவதாக எதிர் க்கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது. மாணவர்களின் மனதை குழப்பும் கீழ்மட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர் வெளிப்படையாக பேச முடியா மல் அரசின் அபிவிருத்தி நடவடிக் கைகளை குழப்பும் பயனற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என் றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை ஜே.வி.பி.யினால் கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் தங்கல்ல பஸ் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளி லும் ஜனாதிபதி கலந்து கொண் டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக