15 மார்ச், 2011

தேர்தல் பிரசாரம் நிறைவு


உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. பிரதான கட்சிகள் நேற்று தமது இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டன.

ஐ. ம. சு. மு. வின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

இ,தில் அமைச்சர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுவரொட்டிகள், தேர்தல் அலங்காரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு 16ஆம் திகதி இரவு வரை கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் பணிகளில் ஈடுபடும் பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் இன்று பிற்பகல் முதல் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்ல வுள்ளனர்.

அரச அதிகாரிகளுக்கான விசேட கூட்டம் நாளை வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது. பொலிஸார் நாளை முதல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக் களம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. வாக்கு மோசடிகளைத் தடுக்கவும் விசேட திட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக