15 மார்ச், 2011

குறையை முறையிட்டோர் வீடு திரும்பும் முன்பே தீர்த்துவைத்த ஜனாதிபதி





துணுக்கேதெனிய மஹாபாக பாடசாலை மாவணர்கள் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிற்கு பயணம் செய்தனர். அவர்கள் அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவும் மறக்கவில்லை.

அதன்போது ஜனாதிபதி அவர்கள் அந்த மாணவர்களிடம் சுகம் விசாரித்துவிட்டு கற்கை நடவடிக்கைகள் பற்றியும் வினவினார். அதன்போது மாணவர்கள், எமது பாடசாலையில் மலசலகூட வசதி, குறைபாடு உள்ளது. பாடசாலைக்குச் செல்லும் வீதியும் மிக மோசமான நிலையிலே உள்ளது என ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தனர்.

துணுக்கேதெனிய மாணவர்கள் இன்ன மும் கொழும்பை சுற்றிப் பார்த்தவாறு உள்ளனர்.

மறுபுறமாக மாலை நேரம் வாகனமொன்றிலே பாடசாலைக்குச் சென்ற ஒருசிலர் பாடசாலைப் பிரதேசத்தை அளந்து விட்டுத் திரும்பிச் சென்றனர். சுற்றுலா சென்ற மாணவர்கள் இன்னமும் கொழும்பிலேயே உள்ளனர். இருளாகிவரும் வேளையில் மற்றுமொரு பிரிவினர் பாடசாலைக்குச் சென்று தகவல்களை கேட்டறிந்தனர். அவர்களில் சப்ரகமுவா மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத்தும் காணப்பட்டார். மறுதினம் காலையில் சேதமான வீதி கொகிரீட் இட்டு புனரமைக்கப்பட்டது.

முதலமைச்சர் இவ்வாறு உடனடியாக செயற்படுவதற்கான காரணம், பாடசாலை மாணவர்களின் முறைப்பாட்டினை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் சப்ரகமுவா மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத்திடம் தொலைபேசி ஊடாக தெரிவித்தமையாகும். துணுக்கேதெனிய பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை முடித்துவிட்டு வீடு திரும்ப முன்னரே பாடசாலையின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சரின் வருகை பற்றி அறிந்த கிராமத்து மக்கள் அங்கே வந்து ஒன்றுசேர்ந்தனர். அவர்கள் மத்தியில் இது பற்றி விளக்கிய முதலமைச்சர் “எமது ஜனாதிபதியின் வேலையைப் பார்த்தீர்களா" இப்படித்தான் அவர் பணியாற்றுவார் என்று கூறிவிட்டுச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக