28 டிசம்பர், 2010

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி அறிவிப்பு

2010 ஆகஸ்undefinedட் மாதம் நடைபெற்ற 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தமிழ் மொழியில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை 2011 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். இவ்வாறு தகைமை பெற்றவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் குடும்ப வருமானம் அடிப்படையில் புலமைப்பரிசில் நிதியினைப் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளதுடன் பிரபல பாடசாலைகளில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்பதற்கு தகைமை பெற்றுள்ளனர்.

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களில் 5 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர். வெளியிடப்பட்டுள்ள பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளில் ஒரு சில பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி சென்ற வருடத்திலும் பார்க்க கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளின் விபரம் வருமாறு:

ஆண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு றோயல் கல்லூரி 177

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 167

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 149

கல்முனை ஸாஹிறா கல்லூரி 146

திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து மத்திய வித்தியாலயம் 144

கொழும்பு இந்துக் கல்லூரி 141



பெண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி 164

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 157

கண்டி பதியூதீன் மகளிர் கல்லூரி 156

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 154

கொழும்பு புனித கிளாரி கல்லூரி 151

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை 151

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி 147



கலவன் பாடசாலைக்கான வெட்டுப் புள்ளிகள்

ஹற்றன் ஹைலன்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் 157

மாவனெல்லை ஸாஹிரா கல்லூரி 152

ஹபுகஸ்தலாவ அல் மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் 150

மடவளை பஸார் மதீனா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 149

மாவனெல்லை பதுரியா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 148

கெடுண கொல்வா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 147

கொக்குவில் இந்து வித்தியாலயம் 146

நுவரெலியா புனித ரைனிட்டி தமிழ் மகா வித்தியாலயம் 145

கொடகல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் 140

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக