தென்னை செய்கை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.
பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படும் தெங்கு செய்கை நிலங்களை அமைச்சு எமது பொறுப்பில் தரும்பட்சத்தில் அவற்றை சிறந்த முறையில் மேம்படுத்திக்கொடுப்பதுடன் தெங்கு செய்கையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதற்கான நடவடிக்கையை ஜனவரி முதல் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, தெங்கு அபிவிருத்தி சபையின் பாதுகாப்புக்கு சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளன ரென்றும் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக