28 டிசம்பர், 2010

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு 12 பிரதேச செயலர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் நேற்று பூர்த்தி; ஜனவரி முதலாம் திகதி நியமனம்

வட மாகாணத்தி லுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு புதிதாக 12 பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ள தாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்படவுள்ள பிரதேச செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். நகரிலுள்ள வட மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நேர்முகப் பரீட்சையை மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர், எஸ். ரங்கராஜா மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.

விஜயலட்சுமி ஆகியோர் நடத்தினர். இந்த நேர்முகப் பரீட்சையின் மூலம் 12 பேர் புதிதாக பிரதேச செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ரீதியில் நியமிக்கப்படவுள்ளனர்.

கல்வித் தகைமை, தரம் என்பவற்றுடன் இளம் வயதுடையவர்களே இம்முறை புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த ஆளுநர், 2011 ஜனவரி மாதம் 1ம் திகதி கொழும்பில் இவர்களுக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என்றார்.

தற்பொழுது வட மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்களில் 60 வயதை தாண்டிய பலர் இருப்பதாகவும் இவர்களது சேவை க்காலம் முடிவுற இருக்கும் நிலையிலேயே இளம் பிரதேச செயலாளர்களை புதிதாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் தற்பொழுது பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் துரித மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மேலும் துரிதமாக அமுல்படுத்து வதற்கு இளம் பிரதேச செயலாளர்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு தொடக்கம் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக திட்ட மிடப்பட்ட சீரான சேவையை உரிய முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மாவட்டச் செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக