28 டிசம்பர், 2010

இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை நேற்று முதல் சந்தையில் * கோழி இறைச்சி 350 ரூபா * முட்டை 12 ரூபா


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை என்பன நேற்று முதல் சந்தையில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு கூறியது.

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து 500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 2 மில்லியன் கோழி முட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில் கோழி இறைச்சி முட்டை என்பவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ 350 ரூபாவுக்கும் முட்டை 11 முதல் 12 ரூபாவிற்கும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சு கூறியது.

இதேவேளை, 16 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற் பொழுது 14 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் முட்டை குறைந்த விலைக்கு விற்கப் படுவதோடு சந்தையில் முட்டை விலை மேலும் குறையும் எனவும் அமைச்சு தெரிவித்தது. சதொச ஊடாக மட்டுமன்றி தனியார் துறையினூடாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன விற்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக