கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும், வடகீழ் பருவமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 55 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 12 ஆயிரத்து 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம். ஹஸீர் தெரிவித்தார்.
744 குடும்பங்களைச் சேர்ந்த 2957 பேர் இடம்பெயர்ந்து ஏறாவூர்ப்பற்று செங்கலடி, கிரான், வாகரை, ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள் பத்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
வாகனேரி உறுகாமம் உன்னிச்சை ஆகிய குளங்கள் திறந்து விடப்பட்டதன் காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் 99 வீடுகள் களிமண் குடிசைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
பகுதியளவில் 433 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. வெருகல் துறை ஊடான பாதை தடைசெய்யப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலை வாகரை ஊடான போக்குவரத்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.கொம்மாந்துறை தீவு, ஈரளக்குளம்,கிரான் மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று செங்கலடி பட்டிப்பளை வாகரை ஆரையம்பதி ஆகிய இடங்களில் வீடுகள் குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரசு மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் பாவனைப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்படுகின்றது.
இதேவேளை ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபைக்குட்பட்ட சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை,பலாச்சோலை, ஐயங்கேணி போன்ற இடங்களில் வெள்ள நீர் வடிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளை பிரதேசசபைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன் முன்னெடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக