ஐக்கிய தேசியக் கட்சியே இந்நாட்டுக்கான தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது. எனவே, அது தொடர்பான தீர்மானங்களை கட்சிகளுடன் பேச்சு நடத்தி பாராளுமன்றத்திலேயே எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, தேசிய கீதமானது சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சிதான் அந்த வகையில் அதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் பேச்சுக்களை நடத்தி பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக