அரச சேவையில் அரச தொழில் முயற்சிகளில் தொழில்புரியும் நிறைவேற்று தரம், நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் தொழில்சார் பதவி நிலைகளை வகிக்கும் உத்தியோகத்தர்களுக்கு சலுகை நிபந்தனையடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், புதிய உதிரிப்பாகங்களை பயன்படுத்தி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
25,000 டாலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 50 முதல் 70 வீத வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் நிதி அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாணசபை பிரதம செயலாளருக்கும் சுற்றிக்கை மூலம் அறிவித்துள்ளது.
1000 சீ.சீ. புதிய வாகன இறக்குமதிக்கு 50 வீத வரியும், 1600 சீ. சீ. வாகனத்துக்கு 55 வீத வரியும். 2000 சீ. சீ. வாகனத்துக்கு 60 வீத வரியும், 2600 சீ. சீ. வாகனத்துக்கு 70 வீத வரியும் அறவிடப்படும்.அரச சேவையிலுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்கள் அரச சேவையில் தொடர்ந்து ஆறு வருடங்கள் சேவையில் ஈடுபட்டுவருபவர்களாக இருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் கல்விசார் பதவி நிலை உத்தியோகத்தர்களும், அரச தொழில் முயற்சி சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களும் 12 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அரச வங்கி உத்தியோகத்தர்கள் இதில் சேர்க்கப்பட வில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக