15 டிசம்பர், 2010

வடமத்திய மாகாணத்தில் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் தாவரம்: ஆய்வில் தகவல்

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றின்மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ளவர்களை அதிகமாகப் பாதித்து வரும் சிறுநீரக வியாதிக்கான காரணங்களில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் வளர்கின்ற அல்கா எனப்படும் தாவரத்தினால் (புலூகிறீன் அல்கா) உற்பத்தி செய்யப்படும் ஒருவகை நச்சுப் பொருளே சிறுநீரக பாதிப்பிற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

நீரோடு இந்த நச்சுப்பொருள் கலப்பதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினர் ஒருவருட காலத்திற்கு மேலாக மேற்கொண்ட ஆய்வுகளின் படியே அத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக