15 டிசம்பர், 2010

முல்லை, கிளிநொச்சியில் இரண்டு ஏக்கரில் நெற்களஞ்சியங்கள்


வடக்கில் பெரும் போக விளைச்சலில் கிடைக்கவிருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்தும் பொருட்டு இரண்டு நெற்களஞ்சியங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய இரு களஞ்சியசாலைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இரு களஞ்சியசாலைகளையும் துரிதமாக அமைக்கவென வட மாகாண சபை, வடக்கின் அவசர மீள் எழுச்சித் திட்டம் என்பவற்றின் ஊடா 80 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் அவசர மீள் எழுச்சி திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய மற்றும் துரித அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யும் விசேட கூட்டம் கொழும்பிலுள்ள ஜனகலா கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.

ரங்கராஜா, வட மாகாண பிரதம செயலாளர் ஏ.சிவகாசுவாமி, வட மாகாண அமைச்சுக்களின் செயலா ளர்கள், வடக்கு அவசர மீள் எழுச்த் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ். சிவகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே ஆளுநர் மேற்படி பணிப்பை விடுத்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் களஞ்சியசாலை அமைப்பதற்கான பணிகள் ஆரம் பிக்கப்பட்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் பல தசாப்தங்களுக்கு பின்னர் இம் முறை ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்ப ரப்பில் பயிர்ச்செய்கை நடவடிக்கை களை மேற்கொள்ள அரசாங்கம் தீர் மானித்து அதற்கு தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களை யும் வழங்கி யுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய அரசினால் கிடைக் கப்பெற்ற நான்கு சக்கர உழவு இய ந்திரங்களும் வட பகுதி விவசாயிகளு க்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக