15 டிசம்பர், 2010

விக்டோரியா நீர்த்தேக்கம் மக்கள் பார்வைக்கு அனுமதி


இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றான விக்டோரியா நீர்த்தேக்கம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள விக்டோரியா மின் உற்பத்தி நிலையம் 1977 ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் பிரித்தானியா அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. இது 1988 ம் ஆண்டு திறக்கப்பட்டது.

நாட்டின் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் பார்வையிட முடியாமல் மூடப்பட்டிருந்தது.

விக்டோரியா நீர்மின் உற்பத்தி நிலையத்துடன் சமனலவௌ, திஸ்ஸ விமலசுரேந்திர மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக