15 டிசம்பர், 2010

மன்னாரில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்








மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசரக்கூட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அடம்பன் மகா வித்தியாலயத்தில் இரானுவத்தின் 542 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது இரானுவத்தின் 542வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விக்கும் லியனகே, சிவில் பாதுகாப்புப்பிரிவு அதிகாரி நலிந்த விதாரனே, அரச அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள்,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்து தரப்படவில்லை என்றும் குறிப்பாக விவசாயம்,குடிநீர்,மலசல கூட வசதியின்மை,வாழ்வாதார உதவிகள் இல்லாமை தொடர்பாகவும் வருகை தந்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக