15 டிசம்பர், 2010

ஐ. தே. கவின் நீண்டகால பிளவு சர்வதேச மட்டத்தில் நிரூபணம்


ஐக்கிய தேசிய கட்சிக்குள் மிக நீண்டகாலமாக இருந்து வந்த இரகசிய பிளவுகள் அக்கட்சியின் சம்மேளனத்தின் பின் சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்த ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஐ. தே. க.வின் சம்மேளனத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடாத்திய பத்திரிகை மாநாடு மற்றும் அதே தினத்தில் ஐ. தே. க. வினது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு இக்கட்சியின் பிளவுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆகவே, ஐ. தே. க. இனி ஒருபோதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. கட்சியின் பிளவை எவராலும் ஒற்றுமைப்படுத்தவும் முடியாது.

மேலும் சம்மேளனத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் பலர் பல அபிப்பிராயங்களை முன்வைத்துள்ளமை மிகவும் வெட்கக் கேடான செயலாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக