12 அக்டோபர், 2010

மீன்பிடி கட்டுப்பாடுகள் யாவும் நேற்று முதல் முற்றாக நீக்கம்

40 குதிரைவலு என்ஜின்களை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி

மீனவர்களின் வாழ்வாதார த்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் கடற் பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டி ருந்த அனைத்து கட்டுப்பாடுக ளையும் அரசாங்கம் நேற்று முதல் தளர்த்தியுள்ளது.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப் பாண மாவட்டங்களில் உள்ள கடற்பகுதியில் உள்ள கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படாததால் அவ்வாறு கண்ணிவெடிகள் இருக்கலாமென சந்தேகிக்கப்படும் இடங்களைத் தவிர மற்றைய அனைத்து கடற்பகுதிகளிலும் மீனவர்கள் இனி மீன் பிடிக்க முடியும் என்று மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனா ரட்னவைச் சந்தித்து பேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கள் இந்த தீர்மானத்தை எடுத்து ள்ளனர்.அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர்ந்த ஏனைய கடற்பிரதேசங்களில் 40 குதிரைச் சக்தி என்ஜின்களைக் கொண்ட படகுகளை பயன்படுத்தவும் முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 குதிரைச் சக்தி வலுவுடன் கூடிய 141 படகுகளை பாதுகாப்பு அமைச்சு மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சிடம் கையளித்துள்ளது. மீன்பிடி அமைச்சு அப்படகுகளை உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கும்.

மீன் பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினர் இந்தப் படகுகளை கைப்பற்றியி ருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக