15 ஜூலை, 2010

இந்து சமுத்திரத்தில் நீர் மட்டம் உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு

இந்து சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும் எனவும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கொலராடோ பல்கலைக்கழகத்தின் வெய்குயிங் ஹன் என்பவர் தலைமையிலான ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக உலகின் வெப்பநிலையில் மாற்றங்கள் நிகழும் எனவும் அத்துடன், சூழல் சுற்றோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டம் பொதுவாக வருடந்தோறும் 3 மில்லிமீற்றர் அதாவது 0.1181 அங்குலத்தினால் உயர்கிறது.வாகன புகை வெளியீடு உட்பட்ட சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் மற்றும் பச்சைவீட்டு தாக்கம் போன்றவை காரணமாகவே பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்கமே கிரீன்லாந்து மற்றும் மேற்கு அந்தாட்டிகா பனிமலைகள் கரைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக