15 ஜூலை, 2010

மனிதனைப் போன்று ஆடைகளுக்கும் உணரும் சக்தி உள்ளது






மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்ற உயிரினங்களுக்கு உணரும் சக்தி உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது மனிதர்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் உணரும் சக்தி உள்ளது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் யோல் பிங்க் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆடைகள் தயாரிக்கப்பயன்படும் இழைகளில் மிகவும் நுண்ணிய அளவிலான மைக்ரோ போன்கள் உள்ளன. அவை மனித உடலில் நடைபெறும் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் மற்றும் மூளையின் அழுத்தத்தை அறிந்து கொள்கின்றன.

அதே நேரத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அகலத்துக்கும் குறைவான நூலிழையை மனித உடலின் உறுப்புகள் அல்லது இதயரத்த நாளம் போன்றவற்றில் பொருத்தி கண்காணித்தால் அல்ட்ரா சவுண்டு போன்ற ஒலியை எழுப்புகின்றன. இந்த தகவல்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக