இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சி நகரில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தார்.
யாழ். குடாநாட்டுக்குரிய எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி இதுவரை காலமும் யாழ். குடாநாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் லீட்டர் ஒன்று 118 ரூபாவிலிருந்து 115 ரூபா 60 சதமாகவும், டீசல் 75 ரூபா 50 சதத்திலி ருந்து 73 ரூபா 60 சதமாகவும் மண்ணெண் ணெய் 53 ரூபா 50 சதத்தி லிருந்து 51 ரூபா 60 சதமாகவும் குறைக்கப்பட்டு ள்ளது.
பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆலோசனை க்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏ-9 பாதை மூடப்பட்டிருந்த காலத்திலும் ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரும் யாழ். குடாவுக்கான எரிபொருள் விநியோகம் நடைபெற்ற போதும் போக்குவரத்து செலவீனமும் சேர்ந்தே எரிபொருள் விற்பனைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டன.
பெளஸர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் செய்வது தற்போது வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டு ள்ளதுடன் சரக்கு ரயில் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவுகள் வெகுவாக குறைக்கப்படுவதால் இதன் பயனை யாழ். குடாநாட்டு மக்களுக்கே பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே எரிபொருள் விலை குறைக்கப்படு வதாக அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எரிபொருளின் விலையை ஒரு ரூபாவினால் குறைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மாகாண மட்டத்தில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் இறுதியில் மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் பாதுகாப்பு துறை தொடர்பான மீளாய்வு கூட்டங்களும் நடைபெற்றன.
இக்கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து வடமாகாண அரச அதிகாரிகள் பங்கு பற்றும் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெற்றுது.
பிரதமர் தி.மு.ஜயரட்ன உட்பட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் ஹெலிக்கொப்டரில் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து சொகுசு பஸ் வண்டிகள் மூலம் இரணைமடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கிளிநொச்சி நகர் களை கட்டியிருந்ததுடன் இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்பட்டன. சுகாதாரத்துறை அம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகளும் ஆயத்த நிலையில் இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வை ஒலி/ஒளிப்பதிவு செய்வதற்கும் செய்தி சேகரிப்பதற்குமாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கு முதற்தடவையாக இலத்திரனியல் ஊடகங்களுக்கு அனுமதியளிக் கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் கிளிநொச்சி மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக