15 ஜூலை, 2010

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : கார்கள் எரிப்பு



மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. இந்திய மாணவர்களின் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடிலாய்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் சிலர், "எங்களை ஆஸ்திரேலிய இளைஞர்கள் கும்பல் ஒன்று மிரட்டியது. எங்களின் கார்களை நெருப்புக் குண்டுகளை வீசி எரித்தது. இதனால், எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, புகார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் அவர்களின் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இதுபோன்று 12 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக யாசிப் முல்தானி (வயது 28) என்ற இந்திய மாணவர் கூறுகையில், ""எங்கள் பகுதியில் வசிக்கும் 15 இளைஞர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். நாங்கள் எப்போது வீட்டில் இருப்போம். எப்போது வேலைக்கு செல்வோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். எங்களை அவர்கள் கண்காணிக்கின்றனர். நாங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் அறிந்துள்ளனர். எங்களின் கார்கள் எது என்பதும் அவர்களுக்கு தெரியும். உள்ளூர்வாசிகள் யாரின் காரையும் அவர்கள் சேதப்படுத்துவதில்லை. வெளிநாட்டவர்களின் கார்களை மட்டுமே எரிக்கின்றனர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக