15 ஜூலை, 2010

கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம்: பேரணியில் தமிழில் பேசினார் ராஜபட்ச






தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவையின் கூட்டத்தை நடத்த இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் அமைச்சரவைக் கூட்டம் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மட்டுமல்லாது பல்வேறு மாகாணங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

÷யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் பெட்ரோல், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து ஊடக அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா கூறியதாவது: இதேபோன்று அமைச்சரவைக் கூட்டங்கள் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இனி நடத்தப்படும்.÷வடக்கு மாகாணத்தில் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிபர் ராஜபட்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்றார் அவர்.

தமிழில் பேசினார் ராஜபட்ச: பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற பின்னர் இரணமடு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம், பேரணியில் ராஜபட்ச கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் சிறிது நேரம் அவர் தமிழிலும் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக