19 மே, 2010

இங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி. வானொலி அறிவிப்பாளர் டொனி கெல்லி அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார்.

அது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்போதே, நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்ட் பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வேடிக்கையாக எதையோ சொல்ல முயன்று, அது தொடர்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.

அது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராணி எலிசபெத் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக எப்படி அறிவிப்பு செய்யலாம் என்று பலரும் கண்டனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பி.பி.சி. வானொலி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக