19 மே, 2010

ஹொரணை மிரிசேன தோட்டம் மூழ்கும் அபாயம் : மக்கள் அவலம்

ஹொரணை புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிசேன தோட்டத்தில் 32 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர் மழை பெய்து வருவதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 12 மணித்தியாளங்கள் இவ்வாறு மழை பெய்யுமாயின் அப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. அவர்களுக்குத் தோட்ட நிர்வாகமோ அல்லது அரச தரப்பினரோ எதுவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

தோட்ட இளைஞர்கள் படகுசேவை மூலம் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹொரணைப் பகுதியில் இதுவரை 987 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிலை கடந்த 2003 ஆம் ஆண்டும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.


ஒரு வாரம் பெய்த மழையால் வீடு வாசலை இழந்து அவலப்படும் தமிழ் சிங்கள மக்களே சிந்தித்து பாருங்கள் ஒரு வருடகாலமாக வீடு வாசலை இழந்து உற்றார் பெற்றார் உறவினர் சொத்துகள் அனைத்தையும் இழந்து முள்ளுக்கம்பி வேலிக்குள் பிச்சை காரர்போல் வாழும் மக்களை பற்றி சிந்திக்க இயற்கை உணர்த்தும் படமாக எண்ணி அனைத்து உயிர்களும் ஒன்றுதான் அனைவருக்கும் பசிக்கும் அனைவருக்கும் உணர்சிகள் உண்டு அனைவருக்கும் பிள்ளை பாசம் உண்டு அகவே அனைத்து உயிர்களையும் பெரிதாக கருதி அனைவரும் நிம்மதியாக வாழ வளி செய்யுங்கள் இல்லையேல் இயற்கை நிற்சையம் மன்னிக்காது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக