19 மே, 2010

எம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்...



பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சையொன் றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக