19 மே, 2010

ஜீ - 15 நாடுகள் : அதிகளவு சந்தை வாய்ப்பைப் பெற இலங்கைக்கு சந்தர்ப்பம் – ஜீ. எல். பீரிஸ்




ஜீ – 15 அமைப்பின் உறுப்பு நாடுகளில் கூடுதல் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்காக ஜீ – 15 நாடுகளிடம் உதவிகளைப் பெறுவதைவிட இலங்கையின் உற்பத்திப் பொருள்களை மேலும் தரமுள்ள தாக்கி அவற்று க்கான கூடுதல் சந்தைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வது பற்றி 14 ஆவது உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சிமாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்குமுகமாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சில் நேற்று (18) நண்பகல் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

ஜீ – 15 நாடுகளைப் பொறுத்தவரை உலக சனத்தொகையில் 33 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 25% எண்ணெய் உற்பத்தியையும் கொண்டுள்ளது டன் ஏற்றுமதித் துறையில் 27% பங்களிப்பைச் செய்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 10 நாடுகளுள் இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் ஜி – 15 இல் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகுமென்றும் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் போது அதனை இலங்கை எதிர்கொண்டு கையாண்ட விதத்தை ஜீ – 15 நாடுகள் வெகுவாகப் பாராட்டியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், அந்த நாடுகள் கொண்டிருக்கும் கொள்கையை இலங்கை திறம்பட நிறைவேற்றி வருவதாகப் பெருமிதத்துடன் பாராட்டியதாகவும் கூறினார்.

மேலும், அனலின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட இயற்கை வளங்களைக் கொண்டு முன்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக