ஜி-15 மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பினார்.
ஜி-15 அமைப்பின் 14 வது மாநாடு ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்ற போது ஜி-15 ன் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்.
ஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த 16 ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்ட ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய், ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஈரான் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அஹ்மதி நெஜாதிக்குமிடையில் மிகவும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஈரானுக்கும், இலங்கைக்குமிடையிலான நீண்ட கால நட்புறவை மீண்டும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.
ஈரானின் வர்த்தக அமைச்சர் மெஹ்தி கலான்ஸாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கையில் நடைபெறுகின்ற பாரிய அபிவிருத்தியைக் கவனத்தில் எடுக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை ஜி-15 அமைப்பின் தலைமைப் பதவியை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஆசியப் பிராந்தியத்திற்கும் மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவமானது என்று மாநாட்டில் பங்குபற்றிய அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டினர்.
ஜி-15 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பதற்காக அமை ச்சர்கள் பலரும் வருகை தந்திருந் தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக