27 ஏப்ரல், 2010

போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு







கொழும்பு:போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில், இலங்கையில் புதிய தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்களை துவங்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபலமான தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்த பகுதிகளில் தோட்டக்கலை, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வவுனியா அருகே ஓமந்தையில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் துவங்கப்படவுள்ளது. நீண்ட கால போரால் பாதிக்கப்பட்டு, போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வரும் குடும்பங்களுக்கு, இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக