27 ஏப்ரல், 2010

சார்க் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த நாளை உரை; பூட்டான் விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு


உறுப்புரிமை நாடுகளுடன் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பதினாறாவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று பூட்டான் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரோ விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக் கப்பட்டுள்ளது.

பாரோ விமான நிலையத்தில் பூட்டான் பிரதமர் ஜஹ்மி தீன்லே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றுள்ளது. விமானத்திலிருந்து இறங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்த பாதையின் இரு மருங்கிலும் அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் இலங்கையின் தேசியக்கொடிகளை அசைத்து ஜனாதிபதிக்கு கெளரவம ளித்துள்ளனர்.

அதனையடுத்து பூட்டான் பிரதமருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் நேற்று மாலை திம்பு நகரிலுள்ள பொது அரும்பொருட்காட்சியகத்தையும் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூட்டானிய விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.

16வது சார்க் உச்சி மாநாடு நாளை பூட்டான் தலைநகர் திம்புவில் ஆரம்ப மாவதுடன் 28, 29 ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து நடைபெறும். சார்க் மாநாட்டுக்கு 25 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி இம்முறை மாநாட்டினை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளார்.

இம்முறை சார்க் மாநாட்டில் சார்க் நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் என 452 பேர் கலந்துகொள்ளவுள்ளதுடன் சார்க் பிராந்திய நாடுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் தெற்காசிய பிராந்திய நாடுகளை மையப்படுத்திய நிதியமொன்றினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

சார்க் பிராந்திய நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டே 1985ம் ஆண்டில் சார்க் மாநாடு ஆரம்பிக் கப்பட்டது. காலநிலை மாற்றத்தினால் உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில் ‘சூழல் மற்றும் காலநிலை’ எனும் தொனியில் இம்முறை சார்க் மாநாடு நடைபெறவுள்ளமை தெற்காசியப் பிராந்தியத்திற்கு முக்கியம் வாய்ந்ததாகும்.

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் நேற்று முதல் பூட்டானுக்கு விஜயம் செய்து வருவதுடன் மாநாட்டு நிகழ்வுகளில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 200ற்கு மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

1985ல் திம்புவில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 25 வருடங்களின் பின்னர் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் சார்க் மாநாட்டில் கலந்துகொள் வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்நாட்டில் பெரும் கெளரவமளிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல தலைவர்களு டனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக