இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்தை நிறைவேற்ற பங்களிப்பேன்
ஆறு வருட காலத்தில் இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக பங்களிப்பை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.
அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தமது அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று காலை பொறுப்பேற்றார். இதனையொட்டி ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் உரை யாற்றுகையிலேயே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார். மத அனுஷ் டானங்களின் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ ஆவணத்தில் அமைச்சர் கையொப்பமிட்டார்.
அமைச்சர் பெளஸி மேலும் கூறியதாவது:-
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 9 அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள் ளேன். முக்கியத்துவம் மிக்க அமைச்சுப் பொறுப்பொன்றை எனக்கு வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
பிரச்சினை ஏற்பட்ட பின்னர் உதவி வழங்குவதை விட பிரச்சினைகள் ஏற்படாது பாதுகாப்பதே பிரதான மாகும். மக்கள் பிரச்சினைகளின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்னெடுத்த நல்ல திட்டங்களை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன். எனக்கு அனர்த்த நிவாரண அமைச்சு புதிய ஒன்றல்ல.
சுற்றாடல் அமைச்சராக பணி புரிந்த போது இந்த அமைச்சுடன் தொடர்புடைய பல பிரிவுகள் எனது அமைச்சின் கீழே இருந் தன. மக்களுக்கு ஏற்படும் அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு சகல நடவடிக் கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக