கற்பழிப்பு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன்.
நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக்கு எதிராக பேசுவார். என்னைப்பற்றிய எல்லா விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு தெரியும். நான் நல்லவன் என்பதற்கு அவர் சாட்சியாக இருக்கிறார். பிறர் வற்புறுத்தலுக்காக எனக்கு எதிராக திரும்பமாட்டார்.
இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆர்.சி. மனோகரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் பல்வேறு தனியார் டி.வி.க்களிலும், பத்திரிகைகளிலும் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாயின. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்மீகத்தில் ஈடுபடும் ஒருவர் தனி நபர் ஒழுக்கத்தை மீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்க தாகும்.
அதே நேரம் நித்யானந்தா சாமியாருக்கு நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வைத் தூண்டுவது போல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்க தாகும். எனவே நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்தது போல் ரஞ்சிதா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். இதன் பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஞ்சிதா மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தீர்களா? இல்லை எனில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்று நீதிபதி அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறும்போது, ஏற்கனவே நித்யானந்தா மீது பல புகார்கள் வந்துள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே ரஞ்சிதா மீது தனி வழக்குப்பதிவு செய்ய தேவை இல்லை. ஏற்கனவே நித்யானந்தா மீதுள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதையடுத்து இவ்வழக்கு குறித்து போலீஸ் தரப்பிலும் மனுதாரர் தரப்பிலும் வரும் திங்கட்கிழமைக்குள் உரிய பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக