24 ஏப்ரல், 2010

சு.க.வின் வரலாற்றில் முதற் தடவை அதிகூடிய வாக்குப் பலம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்தடவையாக அதி கூடிய வாக்குப் பலத்தையும் பாராளுமன்ற ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இந்தத் தேர்தலிலேயே 144 ஆசனங்களைப் பெற்றதுடன் 61% மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1970 ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் (சமகி பெரமுன) 2/3 பெரும் பான்மையை பெற்ற போதிலும் 48.8% வாக்குகளே கிடைத்தன. 1977ல் 5/6 பெரும்பான்மை பெற்ற போதும் 50.9 வாக்குப் பலமே கிடைத்தது.

கடந்த ஏப்ரல் 8, 20 திகதிகளில் நடந்த தேர்தல் முடிவுகளின் படி 61% மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஆப்கன் தேர்தலில் 40% வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கிறது. எமக்கு 50% வாக்குகள் கூடக் கிடைக்காது என்று ஐ.தே.க. கூறியது பொய்யாக்கப்பட்டுள் ளது” என்றும் அமைச்சர் டலஸ் மேலும் கூறினார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சி 1951 ல் ஆரம்பிக்கப்பட்டு 1952 ல் நடந்த தேர்தல் 9 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. இந்தத் தேர்தலில் தனித்து 124 ஆசனங்கள் கிடைத்திருப்பதாக கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் அது நிறைவேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக