24 ஏப்ரல், 2010

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்






பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ''நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,'' என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக