24 ஏப்ரல், 2010

ஐதேகவிலிருந்து வெளியோரில் எழுவருக்கே அமைச்சுப் பதவி : ஐவர் பிரதி அமைச்சர்கள்



ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, 39 பிரதியமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கே பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புதிதாக போட்டியிட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளோ, பிரதியமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

அமைச்சர்களாக பி.தயாரத்ன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ஏழு பேருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இந்திக்க பண்டாரநாயக்க, சரத் குணரத்ன மற்றும் நந்தமித்திர ஏக்கநாயக்க ஆகியோரே பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டதுடன் அதில் பலர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக